×

உலக சாதனையில் இடம்பிடித்த ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா: இன்று நடக்கிறது

திருவனந்தபுரம்: பிரசித்திப் பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா இன்று நடக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் உலகப்புகழ் பெற்றதாகும். இந்த கோயிலில் ஒரே நேரத்தில் பல லட்சம் பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது   குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 1ம் தேதி தொடங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று பிரசித்திப்பெற்ற பொங்கல்   வழிபாடு நடக்கிறது. இன்று காலை 10.20 மணிக்கு கோயில் வளாகத்தில்  வைக்கப்பட்டுள்ள  பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். அதன்பிறகு கோயிலில்  சுமார் 20 கிமீ  சுற்றளவில் திரண்டுள்ள லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடும்  சிறப்பு நிகழ்வு  நடக்கிறது. தொடர்ந்து பிற்பகல் 2.10 மணியளவில் ெபாங்கல்  நிவேத்தியம்  நடக்கிறது. அதன்பிறகே பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு  திரும்புவர். பொங்கல்  விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக  திருவனந்தபுரம் நகரமே விழாக்கோலம்  பூண்டுள்ளது. தமிழகம் மற்றும் ேகரளாவின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும்  பெண்கள் திரண்டுள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனத்தின் ரூ.200 கோடியை அபேஸ் செய்ய முயன்ற வழக்கை விசாரிக்கும் பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொல்ல முயற்சி: மும்பை அருகே பரபரப்பு; 2 பேருக்கு வலைவீச்சு
மும்பை, மார்ச் 9: பிரபல கார்ப்பரேட் நிறுவனத்தின் வங்கி கணக்கை ஹேக் செய்து ₹200 கோடியை அபேஸ் செய்ய முயன்ற வழக்கை விசாரித்து வரும் பெண் போலீஸ் அதிகாரியின் கார் மீது மர்ம ஆசாமிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் அந்த அதிகாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலா சோபாரா போலீஸ் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சித்பவா ஜெயபாவே. சமீபத்தில் கும்பல் ஒன்று ‘டாட்டா சன்ஸ்’ நிறுவனத்தின் வங்கி கணக்கை ஹேக் செய்து அந்த வங்கி கணக்கில் இருந்து கொல்கத்தாவில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கு ₹200 கோடியை மாற்ற முயன்றது. இந்த முயற்சியை உதவி சப் இன்ஸ்பெக்டர் சித்பவா தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸ் படையினர் முறியடித்து 7 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சித்பவா தலைமையில் நடந்து வருகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சித்பவா பணி முடிந்து தனது மாருதி சுசூகி காரில் பால்கரில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள விரார் பாட்டா அருகில் வந்தபோது, எதிர்திசையில் இருந்து கருப்பு நிற பஜாஜ் பல்சர் பைக் வந்தது. அதில் ஜாக்கெட் மற்று முகமூடி அணிந்த இரண்டு ஆசாமிகள் இருந்தனர்.

அந்த ஆசாமிகளில் ஒருவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சித்பவாவின் காரை நோக்கி இரண்டு முறை சுட்டான். பின்னர்  அந்த ஆசாமிகள் பைக்கை வேகமாக ஓட்டிக் கொண்டு பால்கர் நோக்கி சென்று விட்டனர். மர்ம ஆசாமிகள் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு தோட்டாக்கள் காரின் பானெட் பகுதியில் பட்டதால் சித்பவா காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடந்ததும் சித்பவா தனது காரை உடனடியாக அங்கேயே நிறுத்திவிட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.உடனடியாக போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத இரண்டு பேருக்கு எதிராக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சுட்டிற்கும், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ₹200 கோடியை அபேஸ் செய்ய நடந்த முயற்சி தொடர்பான வழக்கிற்கும் தொடர்பு உள்ளதா என்பதை ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Pongal Festival ,Bhagavadhyayamman Temple ,World Record World Record , Pongal Festival ,Bhagavadhyayamman Temple, World Record
× RELATED பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா